இஸ்லாமிய இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு பசு பாதுகாவலர்கள் காரணமா? (காணொளி)
ஜூனைத் மற்றும் நாசீர் ஆகியோர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி, ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து சுமார்200 கிலோமீட்டர் தொலைவில் ஹரியானாவின் பிவானியில் எரிந்த நிலையில் ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. போலீஸ் தகவல்களை சேகரித்தபோது இந்த இரண்டு எலும்புக்கூடுகள் நாசிர் மற்றும் ஜூனைத்துடையது என்று தெரிய வந்தது. இந்த இறப்புகளுக்கு பசு பாதுகாவலர்கள்தான் காரணம் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தில் 9 பேர் மீது ராஜஸ்தான் போலீஸ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. மேலும் நாசிர் மற்றும் ஜூனைத்தின் மரணத்திற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பிபிசி குஜராத்தி சேவை கள ஆய்வை மேற்கொண்டது. இவர்களின் மரணத்திற்கு பசு பாதுகாவலர்கள் காரணமா, ஹரியானா போலீஸ் காரணமா, ராஜஸ்தான் போலீஸ் காரணமா அல்லது இரு மாநில அரசுகளுக்கு இடையிலான மோதல் காரணமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



