ரோபோ ரிக்ஷாவை வடிவமைத்த சூரத் மாணவர்கள்

மனிதர்களை போல சிந்தித்து செயல்படும் ரோபோவை கண்டுபிடிக்கும் ரோபோவை வடிவமைக்கும் ஆர்வத்தில் உள்ள சூரத் மாணவர்கள், தற்போது ரோபோ ரிக்ஷாவை வடிவமைத்து அசத்தியிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு தான் இனி எதிர்காலம் என்பதால் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வகை ரோபோக்களை தயாரிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

கடந்த 4-5 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். இது எங்களின் முதல் ரோபோ அல்ல. பல்வேறு நோக்கங்களுக்காக ரோபோக்களை வடிவமைத்துள்ளோம். இந்த ரோபோ இன்னும் முழுமைபெறவில்லை. சாலையில் இதனை சோதனை செய்து கொண்டிருந்தோம். அப்போது எடுத்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன. இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்கிறார் பி.டெக் மாணவரான சிவம் மவுரியா. (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: