கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டால் ரூ.100 பரிசு - முதியோர் கல்வியில் அசத்தும் பஞ்சாப் பள்ளி - காணொளி

காணொளிக் குறிப்பு, கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டால் ரூ.100 பரிசு - முதியோர் கல்வியில் அசத்தும் பள்ளி
கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டால் ரூ.100 பரிசு - முதியோர் கல்வியில் அசத்தும் பஞ்சாப் பள்ளி - காணொளி

பஞ்சாப் மாநிலம் பாலோ கிராமத்தில் இருக்கும் பள்ளி இது. இதன் பெயர் ‘பேபே-பாபு’ பள்ளி. பஞ்சாபி மொழியில் ‘அம்மா-அப்பா’வைச் செல்லமாக ‘பேபே-பாபு’ என்று அழைப்பார்கள்.

இந்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் அனைவருமே வயது முதிர்ந்தவர்கள்.

முதியோர் கல்வியில் ஆர்வமாக உள்ள ராஜ்விந்தர் மற்றும் ஜஸ்லீன் ஆகியோர் இப்பள்ளியைத் துவங்கினர்.

இந்தப் பள்ளி ஜனவரி மாதம் ஒரு நூலகத்தில் துவங்கியது. பள்ளியில் 80 மாணவர்கள் உள்ளனர் இரண்டு வகுப்புகள் உள்ளன.

இங்கு, மாணவர்கள் கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டால், அவர்களுக்குப் பரிசாக ரூ.100 வழங்கப்படுகிறது.

பஞ்சாப், முதியோர் கல்வி

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)