வாழ்க்கையைத் தேடி சகாரா பாலைவனத்தை நடந்தே கடக்கத் துணிந்த இளைஞர் - காணொளி
வாழ்க்கையைத் தேடி சகாரா பாலைவனத்தை நடந்தே கடக்கத் துணிந்த இளைஞர் - காணொளி
சூடானின் உள்நாட்டுப் போரில் தப்பி, பல மக்கள் சாட் நாட்டுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். அவர்களில் பலர் அங்கிருந்தும் தப்பி ஐரோப்பா செல்ல விழைகின்றனர்.
இவர்கள் சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல வேண்டுமெனில், சகாரா பாலைவனத்தைக் கடந்து செல்ல வேண்டும்.
ஆனால், 2023-இல் மட்டும் சகாரா பாலைவனத்தைக் கடக்கையில் 161 அகதிகள் இறந்தனர், என்கின்றனர் நிபுணர்கள்.
சாட் நாட்டில் இருக்கும் சூடான் அகதிகளுக்கான முகாம்களில், ஐரோப்பா செல்லச் சட்டப்பூர்வமான மாற்று வழிகள் பற்றி ஐ.நா பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
மேலும் விவரங்கள் காணொளியில்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



