சேத்தன் கொரடா: இரு கால்களும் இல்லாமலே கார் பந்தயத்தில் சாதிக்கும் வீரர்

காணொளிக் குறிப்பு,
சேத்தன் கொரடா: இரு கால்களும் இல்லாமலே கார் பந்தயத்தில் சாதிக்கும் வீரர்

சேத்தன் கொரடா சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர். இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கெடுத்தார்.

கடந்த 18 ஆண்டுகளாக அவர் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கார் பந்தய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.

மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசும் சேத்தன், “எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது கார் பந்தயங்கள் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன” எனத் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், “விடா முயற்சி வேண்டும். எது ஒன்றையும் முடிவெடுத்தால் விடக்கூடாது. எந்தவொரு எல்லைகளையும் மனதில் நிர்ணயித்துக் கொள்ளக்கூடாது. எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டும்," என்று ஊக்கத்துடன் தெரிவித்தார்.

அவர் குறித்து விரிவாக வீடியோவில்...

தயாரிப்பு: சிராஜ்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: எ. வில்பிரட் தாமஸ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)