சிகை அலங்கார நிபுணராக இணையத்தை கலக்கும் 3 வயது சிறுமி - காணொளி

காணொளிக் குறிப்பு, மேற்கு ஆப்பிரிக்கா: சிகை அலங்கார நிபுணராக இணையத்தைக் கலக்கும் 3 வயது சிறுமி
சிகை அலங்கார நிபுணராக இணையத்தை கலக்கும் 3 வயது சிறுமி - காணொளி

மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி, தனது தாயின் சிகை அலங்கார கடைக்கு வரும் பெண்களின் தலைமுடியை அழகாக பின்னும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

வைரலாகி வரும் அந்த காணொளிகளில், லார்டினா எனும் அந்த 3 வயது சிறுமி, வாடிக்கையாளர்களின் தலைமுடியை மிகவும் திறமையாகவும் துல்லியமாகவும் பின்னுவதைக் காண முடிகிறது.

பலரும், லார்டினா ஒரு மேதை என்றும், அவரது திறமைகளை மேம்படுத்த முறையான வழிகாட்டுதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

"என் மகளின் திறமை காரணமாக பலரும் இங்கு வருகிறார்கள். பிறர் அவளை சமூக ஊடகங்களில் பார்த்துவிட்டு இங்கு வர விரும்புகிறார்கள். என் மகள், அவர்களது தலைமுடியை பின்ன வேண்டுமென விரும்புகிறார்கள்." என்கிறார் லார்டினா நான்சியின் தாய் அமினா யுகுபு.

"நாங்கள் எதையும் கற்பிக்கவில்லை, அவளே எல்லாவற்றையும் செய்கிறாள். அவள் எந்தப் பயிற்சியும் இல்லாமலே இதைச் செய்வது மிகவும் மகிழ்ச்சியே" என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)