லண்டனில் சட்டவிரோதமாக டிரோன் மூலம் சிறைக்குள் சென்ற பொட்டலம்

காணொளிக் குறிப்பு,
லண்டனில் சட்டவிரோதமாக டிரோன் மூலம் சிறைக்குள் சென்ற பொட்டலம்

இது தெற்கு லண்டனில் உள்ள ஒரு சிறைக்குள் டிரோன் மூலம் பொட்டலம் விநியோகிக்கப்பட்ட காட்சி.

ஜூன் 21ஆம் தேதி எச்எம்பி வாண்ட்ஸ்வொர்த் சிறைக்குள் டிரோன் மூலம் பொட்டலம் விநியோகிக்கப்பட்ட காட்சியை 'பிபிசி நியூஸ்நைட்' படம் பிடித்தது. இந்த சிறையில் பாலியல் குற்றவாளிகள், பயங்கரவாதிகள் உள்ளிட்ட கைதிகள் உள்ளனர்.

டிரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 10 மில்லியன் யூரோ செலவிடப்பட்டு, நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறியது. ஆனால் இந்த குறிப்பிட்ட காட்சி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு