காணொளி: ஜப்பானில் செருப்பை காலால் வீசும் வித்தியாசமான போட்டி

காணொளிக் குறிப்பு, ஜப்பானில் செருப்பை காலால் வீசும் வித்தியாசமான போட்டி
காணொளி: ஜப்பானில் செருப்பை காலால் வீசும் வித்தியாசமான போட்டி

ஜப்பானின் கிஃபு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை செருப்பை காலால் வீசி எறியும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது.

இறுதிச்சுற்றில் 204 பேர் பங்கேற்க, 21.9 மீட்டர் தூரம் செருப்பு எறிந்த வீரர் வெற்றிபெற்றார்.

முந்தைய சுற்றில் அவர் 24.5 மீட்டர் தூரத்துக்கு செருப்பு எறிந்ததாக, போட்டி ஏற்பாட்டாளர் கூறினார்.

போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுக்கட்டணம் 20 ஜப்பானிய யென் ஆகும்.

இந்த நிதி 'Hospital Clown Japan'-க்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

2006 முதல் நடத்தப்படும் இந்த போட்டியில் இந்த ஆண்டு 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு