பிரிட்டன்: இனவெறிக்கு எதிரான பேரணி - ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்

காணொளிக் குறிப்பு,
பிரிட்டன்: இனவெறிக்கு எதிரான பேரணி - ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்களும் கலவரங்களும் கடந்த ஒரு வாரமாக அரங்கேறியது. புலம்பெயர்ந்தோரின் வணிக வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

புலம்பெயர்ந்தவர்களை எதிர்ப்பதாக அவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், புலம்பெயர்ந்தோரை வரவேற்பதாகவும், இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கானோர் ஆகஸ்ட் 7ஆம் தேதி இங்கிலாந்தில் பேரணிகளை நடத்தினர்.

வடக்கு லண்டன், பிரிஸ்டல் மற்றும் நியூகேஸில் உட்பட, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் இவர்கள் ஒன்றுகூடி பெரும்பாலும் அமைதியான முறையில் ஊர்வலம் சென்றனர்.

அகதிகளை வரவேற்பதாக அவர்கள் கோஷம் எழுப்பினர்.

கடந்த வார நிகழ்வுகளுக்கு பிறகு, மேலும் 100க்கும் மேற்பட்ட ‘புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டங்கள்’ நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)