காணொளி: பத்திரிகையாளர் கொலை பற்றிய கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில் என்ன?

காணொளிக் குறிப்பு, பத்திரிகையாளர் கொலை பற்றிய கேள்விக்கு டிரம்ப் பதில்
காணொளி: பத்திரிகையாளர் கொலை பற்றிய கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில் என்ன?

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

முகமது பின் சல்மானுக்கு ஆதரவாகப் பேசிய டிரம்ப், "இவர் சிறப்பான வேலையை செய்துள்ளார். மிகவும் சர்ச்சைக்குரிய நபரை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் பேசும் நபரை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. நீங்கள் இவரை விரும்பினாலும், இல்லாவிட்டாலும், விஷயங்கள் நடந்துவிட்டன, அதைப் பற்றி இவருக்கு எதுவும் தெரியாது. அதை அப்படியே விட்டுவிடலாம். இதுபோன்ற கேள்வி கேட்டு நம் விருந்தினரை சங்கடப்படுத்த வேண்டியதில்லை." என்றார்.

முகமது பின் சல்மான் பேசுகையில், "என்னை பதிலளிக்க அனுமதியுங்கள். அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. சௌதி அரேபியாவில் எங்களுக்கும் இது வேதனையாக இருந்தது. விசாரணை போன்ற அனைத்து முறையான நடவடிக்கைகளையும் எடுத்தோம். இது போன்ற ஒன்று நடைபெறாமல் இருக்க எங்கள் அமைப்பை மேம்படுத்தினோம். இது வேதனையானது, மிகப்பெரிய தவறு, மேலும், அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்." என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு