கேரளாவின் 'பாட்டு கிராமம்' - இசையின்றி அமையாது இவர்களின் வாழ்வு!

காணொளிக் குறிப்பு, கேரள பாலகாடு மாவட்டத்தில் வால்முட்டி முதல் 'பாட்டு கிராமம்'ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் 'பாட்டு கிராமம்' - இசையின்றி அமையாது இவர்களின் வாழ்வு!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட சித்தூர் அருகே, வால்முட்டி காலனி என்ற கிராமத்தை ‘பாட்டு கிராமம்’ என சமீபத்தில் சித்தூர் – தத்தமங்கலம் நகராட்சி அறிவித்திருந்தது. ‘பாட்டு கிராமம்’ என்ற தலைப்பில் ஒரு கிராமத்தை அறிவித்து, அங்குள்ள இசைக்கலைஞர்களை பெருமைப்படுத்தியுள்ளது கேரளாவில் இதுவே முதல் முறை.

அந்த ஊரில் பல தலைமுறைகளாக எல்லோருமே இசைக்கலைஞர்களாக உள்ளனர். ஓணம், கேரள உத்சவம் பண்டிகைகளுக்கு பல ஊர்களுக்குச்சென்று, துடி மற்றும் ஜண்டை மேளம் இசைத்து சிவன் கிருஷ்ணன் குறித்தான ‘துயிலுணர்த்த’ பாட்டுக்களை பாடி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தான் கிராம மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்று அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கள் முன்னோர்களை பார்த்து தங்களுக்கும் ஆர்வம் வந்ததால், கிராமத்தில் இருக்கும் எல்லோரும் பாட்டுப்பாடி, இசைக்கருவிகள் இசைத்து பழகி வருகின்றனர்.

அந்த கிராமத்தில் நுழைந்தால், திரும்பும் திசை எல்லாம், ஏதாவது ஒரு வகையான இசை, பாடல் பயிற்சி, இசை கருவிகள் வாசிப்பு கேட்டுக் கொண்டிருப்பதை பிபிசி குழு காட்சிப்படுத்தியுள்ளது.

பாட்டு கிராமம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)