காணொளி: கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் கொள்ளை - என்ன நடந்தது?
காணொளி: கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் கொள்ளை - என்ன நடந்தது?
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்ததுள்ளது. இந்த திருட்டில் 56 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் உள்ளிட்டவை திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட 3 வட மாநிலத்தவர்களை பிடிக்க முற்பட்ட போது அவர்கள் ஆயுதங்கள் மூலம் தாக்க முற்பட்டதாகவும் அவர்களை சுட்டு பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



