ஜம்மு-காஷ்மீர்: காவல் நிலையத்தில் நடந்த வெடிப்புச் சம்பவம் - பின்னணி என்ன?
ஜம்மு-காஷ்மீர்: காவல் நிலையத்தில் நடந்த வெடிப்புச் சம்பவம் - பின்னணி என்ன?
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பின்னிரவில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல்நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர்.
அண்மையில் ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் நௌகாம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் மாதிரி சேகரிப்பு பணியின் போது துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் ஜம்மு காஷ்மீரின் டிஜிபி தெரிவித்தார். இந்தப் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்ததாகவும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



