ஹரித்வார் நிலச்சரிவில் நூலிழையில் தப்பிய இளைஞர்கள் - காணொளி
ஹரித்வார் நிலச்சரிவில் நூலிழையில் தப்பிய இளைஞர்கள் - காணொளி
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நூலிழையில் தப்பிய காட்சி இது.
ஆகஸ்ட் ஐந்தாம் தேதி உத்தரகாசியில் உள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. 100க்கும் மேற்பட்ட மக்களை காணவில்லை என்றும் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
சுமார் 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ள நிலையில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



