ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் அணிந்த சட்டையை தயாரித்த குஜராத் கலைஞர்
சமீபத்தில் வெளியான F1 திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் அணிந்திருந்த சட்டை குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தயாரிக்கப்பட்டது.
இந்த சட்டையை தயாரிக்க நேரம் எடுத்தது. கிட்டத்தட்ட 15-20 நாட்கள் ஆனது. ஆனால், ஒரு ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அந்த சட்டையை அணிவார் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை." என்கிறார் டாங்கலியா கலைஞர் பால்தேவ் ரத்தோட்.
இந்த வகை சட்டை செய்யப்படும் முறை என்பது குஜராத்தில் மட்டுமே காணப்படும் 700 ஆண்டுகள் பழமையான கலையாகும். புகழ்பெற்ற டங்காலியா கலைஞரான பால்தேவ் ரத்தோட்தான் இந்த சட்டையைத் தயாரித்தார்.
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தின் தேடரா கிராமத்தை சேர்ந்த பால்தேவின் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக டங்காலியா கலையை செய்து வருகின்றனர். மேலும், தேடரா கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் இந்த கலையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



