சீனாவின் ரோபோ கால்பந்து போட்டி - தடுமாறி விழுந்த ரோபோவுக்கு என்ன ஆனது?
சீனாவின் ரோபோ கால்பந்து போட்டி - தடுமாறி விழுந்த ரோபோவுக்கு என்ன ஆனது?
சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஹியூமனாய்டு ரோபோக்களுக்கான பிரத்யேக கால்பந்து போட்டி பார்வையாளர்களை கவர்ந்தது. சில ரோபோக்கள் விளையாட்டில் தடுமாறி விழுந்தன.
இந்த ரோபோக்கள் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படுகின்றன. பந்தை அடையாளம் கண்டு மைதானத்தைச் சுற்றி நகர இவை காட்சி உணரிகளைப் பயன்படுத்துகின்றன.
ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலக ஹியூமனாய்டு ரோபோ விளையாட்டுகளுக்கான முன்னோட்டமாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



