சுனாமி: 2004 டிசம்பர் 26 அன்று நடந்தது என்ன? தாக்கத்தை காட்டும் புகைப்படத் தொகுப்பு

26 டிசம்பர் 2004 அன்று இந்தோனீசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.

'சுனாமி' - 2004ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற வார்த்தை தெரியாமல் காதில்பட்டாலும்கூட உள்ளூர ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்தும், குறிப்பாக கடலோர பகுதிகளில் வசித்தவர்களுக்கும் வசிப்பவர்களுக்கும்.

சுனாமி தாக்கி இன்றோடு 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் சுனாமி தாக்கிய போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட சேதங்களையும் விளக்குகிறது இந்த புகைப்படத் தொகுப்பு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு