அமெரிக்கக் கப்பலைக் குறிவைத்து தாக்கிய ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் – மோதல் வலுக்கிறதா? – காணொளி

காணொளிக் குறிப்பு, அமெரிக்கக் கப்பலைக் குறிவைத்து தாக்கிய ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் – காணொளி
அமெரிக்கக் கப்பலைக் குறிவைத்து தாக்கிய ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் – மோதல் வலுக்கிறதா? – காணொளி

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமன் கடற்கரையில் அமெரிக்காவிற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அமேரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஜிப்ரால்டர் ஈகிள் என்ற கப்பலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் தனது சமூக ஊடக பக்கத்தில் கூறியுள்ளது.

மறுபுறம் இந்த தாக்குதல் துல்லியமாகவும் நேரடியாகவும் நடத்தப்பட்டதாக ஹூத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இருப்பதாக கூறிக்கொள்ளும் இரான் ஆதரவுப்பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

ஹமாஸ் மற்றும் பாலத்தீனர்களுக்கு தாம் ஆதரவளிப்பதை வெளிப்படுத்த, இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாக்கி வருகிறோம் என ஹூத்தி கூறியுள்ளது.

வணிக கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

அமெரிக்கக் கப்பலைக் குறிவைத்து தாக்கிய ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)