பஹல்காம் தாக்குதல்: 'உடனே வீடு திரும்ப வேண்டும்' - அச்சத்தில் சுற்றுலா பயணிகள்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பலர் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர். செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற எதிர்பாராதத் தாக்குதலுக்குப் பிறகு, அச்சத்தில் உறைந்துள்ள சுற்றுலாப் பயணிகள், உடனே தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றனர்.
ஜஸ்தீப் எனும் சுற்றுலாப் பயணி கூறுகையில், "நேற்று இரவு நாங்கள் இங்கே தங்கியிருந்தோம், இன்று ஸ்ரீநகர் செல்ல திட்டமிட்டிருந்தோம். தற்போது இங்கும் நிலைமை மோசமாக இருக்கிறது. எனவே, உடனே நாங்கள் ஸ்ரீநகருக்குச் செல்கிறோம்.
பயமாகத் தான் இருக்கிறது. முதல்முறையாக இப்படிப்பட்ட சூழலைப் பார்க்கிறோம். எனவே உடனடியாக ஸ்ரீநகருக்கு செல்கிறோம்.
தொலைக்காட்சியில் பார்க்கும்போது இங்கு நிலைமை நன்றாக இருப்பதாக தெரிந்தது. ஆனால், உண்மையில் இங்கு அப்படியில்லை... நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. குழந்தைகள் பயந்து போயுள்ளனர். எங்கள் முழு குடும்பமும் இங்கு வந்துள்ளோம், எனவே, உடனடியாக எங்கள் வீட்டுக்கு செல்ல விரும்புகிறோம்." என்றார்.
மற்ற சுற்றுலாப் பயணிகள் என்ன கூறுகின்றனர்? விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



