You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் அதிரடி மாற்றம் - எவையெல்லாம் விலை குறையும்?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகித முறை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
12 சதவீதம் மற்றும் 28 சதவீத விகித அடுக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு புதிய விகிதங்கள் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும்.
மலிவாகியுள்ள அன்றாடப் பொருட்கள் - ஜி.எஸ்.டி 5%
- ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை, டாய்லெட் சோப் பார், டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், வெண்ணெய், நெய், சீஸ், டெய்ரி ஸ்ப்ரெட்
- பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள், புஜியா கலவை, பாத்திரங்கள், குழந்தைகளுக்கான பாலூட்டும் பாட்டில்கள், நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள்
- தையல் இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள்
சுகாதாரத் துறை
- சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு (ஜிஎஸ்டி 18% லிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது)
- தெர்மோமீட்டர், மருத்துவ தர ஆக்ஸிஜன், நோயறிதல் கிட், குளுக்கோமீட்டர், சோதனை அட்டைகள் (strips) (ஜிஎஸ்டி 5%)
கல்வி மற்றும் விவசாயத் துறை
- வரைபடங்கள், விளக்கப்படங்கள், குளோப்கள், பென்சில்கள், ஷார்ப்பனர்கள், வண்ணங்கள், புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், அழிப்பான் (ஜிஎஸ்டி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது)
- டிராக்டர் டயர்கள் மற்றும் அதன் பாகங்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது)
- டிராக்டர்கள், உயிர் பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச்சத்துக்கள், சொட்டு நீர் பாசன அமைப்புகள், தெளிப்பான்கள் (ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது).
மலிவாகியுள்ள மின்னணு பொருட்கள்
- பாத்திரம் கழுவும் இயந்திரங்கள், மோட்டார் பொருத்தப்பட்ட மின்விசிறிகள் மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தும் கூறுகள் போன்ற ஏசி இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- டிவி, மானிட்டர்கள், புரொஜெக்டர்கள், செட்டாப் பாக்ஸ்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர ஜிஎஸ்டி வரி - 40%
- பான் மசாலா, சிகரெட், குட்கா
- சோடா போன்ற காற்றூட்டப்பட்ட நீர், காஃபினேட்டட் பானங்கள்
- பெரிய அளவு கார்
நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
- புதிய கட்டணங்கள் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும்.
- வட்டி விகித குறைப்பால் அரசுக்கு ரூ.93,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
- கவுன்சில் இரண்டு அடுக்கு விகிதங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவை 5 மற்றும் 18 சதவீதமாகும்
- இது தவிர, 40 சதவீத அடுக்கில் இருந்து அரசுக்கு சுமார் 45,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது, வாக்கெடுப்பு தேவைப்படவில்லை.
- மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு