பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இந்து பெண் குழந்தையை மீட்க போராடும் முஸ்லிம்கள்

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தானில் கடத்தப்பட்ட எட்டு வயது இந்து பெண் குழந்தையை மீட்கக்கோரி அங்குள்ள முஸ்லீம்கள் போராடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இந்து பெண் குழந்தையை மீட்க போராடும் முஸ்லிம்கள்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் எட்டு வயது இந்து சிறுமி பிரியா குமாரி கடத்தப்பட்டதற்கு முஸ்லிம் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரியாவின் குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகளாக அவரை மீட்க முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் இப்போது அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஆனால், முஸ்லிம் ஆர்வலர்கள் இந்த போராட்டத்தை தொடர்கின்றனர்.

பிரியாவின் தந்தை ராஜ் குமார் ஒரு கடை வைத்திருக்கிறார், அவர் தனது மகளை மீட்க இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார். அவர் காவல்துறை அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தொடர்ந்து அணுகினார், ஆனால் இப்போது அவர் நம்பிக்கையை இழந்துவிட்டார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "முஹர்ரம் அன்று பிரியா குமாரி கடத்தப்பட்டார். அன்றைய தினம் மொபைல் போன் சேவை முடக்கப்பட்டிருந்தது, பொது போக்குவரத்து வசதியும் இல்லை.

அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இது ஒரு கடினமான வழக்கு, 1000க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அவர்களில் 22 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனையும் நடத்தப்பட்டது," என்றார்.

விரிவான தகவல்கள் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)