இஸ்ரேல் - பாலத்தீனம்: காஸாவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

காணொளிக் குறிப்பு, காஸாவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
இஸ்ரேல் - பாலத்தீனம்: காஸாவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

காஸாவில் குழந்தைகள் வாழ்க்கை தொடர்ந்து ஆபத்திலேயே உள்ளது. இடிபாடுகளுக்கு இடையே குழந்தைகளின் உடல்கள் சில நாட்களாக சில வாரங்களாக கூட சிக்கி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சில தருணங்களில் குழந்தைகள் தங்கள் மொத்த குடும்பத்தையும் இழக்க நேரிடும். அதேபோல, குழந்தைகளும் திடீரென இறக்க நேரிடலாம். இதனால் சிலர் கைகளில் தங்கள் பெயரை எழுதுகிறார்கள். அதன் மூலம் காயம்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ அவர்களை அடையாளம் காண முடியும்.

காஸா குழந்தைகளுக்கு உயிர் பிழைத்திருப்பது சவால் நிறைந்ததாக மாறிவிட்டது. ராக்கெட்டுகளிடம் இருந்து மட்டுமல்ல, பசி மற்றும் நோய்களிடம் இருந்தும் கூடதான். ரொட்டிகளும் சுத்தமான நீர் கிடைப்பதும் கடினமானதாக மாறிவிட்டது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)