அனல் பறந்த தடுப்பாட்டத்தை உடைத்து ரொனால்டோ அடித்த அநாயச கோல்

காணொளிக் குறிப்பு, அனல் பறந்த தடுப்பாட்டத்தை உடைத்த ரொனால்டோவின் அநாயச கோல்
அனல் பறந்த தடுப்பாட்டத்தை உடைத்து ரொனால்டோ அடித்த அநாயச கோல்

சர்வதேச கால்பந்தில் போர்ச்சுகல் தேசிய அணியில் மீண்டும் இடம் கிடைத்த உற்சாகத்தில், சௌதி ப்ரோ லீக்கில் அல்-நாசர் அணிக்காக நட்சத்திர வீரர் ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், ஆபா அணியை வீழ்த்திய அல்-நாசர் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை நெருங்கியுள்ளது. கால்பந்து உலகில் அதிகம் அறியப்படாதிருந்த சௌதி ப்ரோ லீக் தொடர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வருகைக்குப் பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாகிவிட்டது.

வரலாறு காணாத ஊதிய ஒப்பந்தத்துடன் அந்த அணியில் இணைந்துள்ள அவர், அந்த அணிக்காக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன்மூலம் தனக்கு மட்டுமின்றி, சௌதி ப்ரோ லீக் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் மதிப்பு கிடைத்துள்ளது.

ரொனால்டோ, மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர்: கால்பந்து உலகில் அதிக சம்பளம் யாருக்கு?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: