சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்கு மையங்கள் அதிகமாக இருக்க என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, வாக்கு மையம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்கு மையங்கள் அதிகமாக இருக்க என்ன காரணம்?
சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்கு மையங்கள் அதிகமாக இருக்க என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்கு மையங்கள் அதிகமாக இருக்க என்ன காரணம்?

தேர்தல் செயல்முறையில் வாக்குப்பதிவு நாள் மிக முக்கியமானது. இந்த நாளில் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களின் வாக்கை செலுத்துகின்றனர். ஆனால் வாக்கு மையம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்று உங்களுக்குத்தெரியுமா?

வாக்கு மையம் என்பது தேர்தல் நடக்கும் இடம். இங்கு வாக்காளார்கள் சென்று வாக்களிப்பார்கள். ஒரு வாக்கு மையத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகள் இருக்கும்.

1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வாக்கு மையம் தொடர்பாக விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

2020ல் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு மையம் இருக்க வேண்டும்.

எந்தவொரு தொகுதியிலும் வாக்களிக்க ஒரு வாக்காளர் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கக்கூடாது.

சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் அல்லது உத்தரபிரதேசம் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் வாக்கு மையங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதற்கு இதுவே காரணம். தொலைதூர பகுதிகளில் வாக்கு மையங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: