காணொளி: பாலத்தீனம் தனி நாடானால், தலைமையேற்பது யார்?
காணொளி: பாலத்தீனம் தனி நாடானால், தலைமையேற்பது யார்?
பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளன.
அமைதி மற்றும் இரு நாடுகள் தீர்வுக்கான சாத்தியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்த முடிவை எடுத்ததாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்தார்.
முன்னதாக 150க்கும் மேற்பட்ட நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஆனால் பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் சமீபத்திய அங்கீகாரம் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக பலரால் பார்க்கப்படுகிறது..
ஆனால் இந்த விஷயத்தில் பல சிக்கலான கேள்விகள் உள்ளன. பாலத்தீனம் என்றால் என்ன? அங்கீகரிக்க அப்படி ஒரு நாடு உள்ளதா?
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



