சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் டிரம்புக்கு போன் செய்த பிரான்ஸ் அதிபர்

காணொளிக் குறிப்பு, டிரம்ப் அணிவகுப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட மக்ரோங்
சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் டிரம்புக்கு போன் செய்த பிரான்ஸ் அதிபர்

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ளார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்.

அப்போது நியூயார்க் நகரில் பிரெஞ்சு அதிகாரிகளுடன் பயணித்தவர் திடீரென காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

டிரம்பின் வாகன அணிவகுப்பு வர இருப்பதால் அவரின் வாகனம் நிறுத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது உடனடியாக டிரம்புக்கு அழைத்து பேசினார் டிரம்ப்.

"என்ன நடந்தது தெரியுமா? உங்களால் சாலையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நான் சாலையின் நடுவே காத்திருக்கிறேன்." எனத் டிரம்பிடம் தெரிவித்தார் டிரம்ப்.

என்னுடன் பத்து பேர் இருக்கிறார்கள். நாங்கள் பிரான்ஸ் தூதரகத்துக்கு செல்ல வேண்டும் என காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தார் மக்ரோங்.

அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், "என்னை மன்னிக்க வேண்டும். அதிபரின் வாகன அணிவகுப்பு வருவதால் அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது." என்றனர்.

இதுவரை அவரது வாகனம் வரவில்லை என்றால் நான் சென்றுவிடுகிறேன் என்று மீண்டும் மக்ரோங் கூறினார். ஆனால் அவரது வாகனம் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு