இத்தாலி வரை சென்ற கொல்ஹாப்பூரி செருப்பு - வறுமையில் வாடும் உற்பத்தியாளர்கள்
இத்தாலி வரை சென்ற கொல்ஹாப்பூரி செருப்பு - வறுமையில் வாடும் உற்பத்தியாளர்கள்
இதுதான் கொல்ஹாப்பூரி செருப்பு. இந்திய செருப்பு வகையான இது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான பிராடா, மிலான் நகரில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சியில் இதே போன்ற செருப்புகளை காட்சிப்படுத்தியதுதான்.
ஆனால் அந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் கொல்ஹாப்பூர் அல்லது இந்தியாவை பற்றி எவ்வித குறிப்பிடலும் இல்லாததை பலரும் கண்டித்து வருகின்றனர்.
கண்டனங்களுக்கு பிறகு, பிராடா இந்த வடிவமைப்பின் இந்திய பின்னணியை ஒப்புக்கொண்டது. இருந்தாலும், மேற்கு இந்திய நகரமான கொல்ஹாப்பூரில், இந்த கைவினைப் செருப்புகளை தலைமுறை தலைமுறையாகச் செய்பவர்களை அது மகிழ்விக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



