காணொளி: இந்தியாவில் பாலியல் தொழிலாளர்களின் நிலை
எச்சரிக்கை: இந்தக் காணொளியில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
(சமூகம் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 17 அன்று, பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உலகம் முழுவதும் குரல் எழுப்பப்படுகிறது.)
அரசு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் சுமார் 10 லட்சம் பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், தொண்டு நிறுவனங்களின் (NGO) கணக்குப்படி இந்த எண்ணிக்கை முப்பது லட்சம்.
இந்தியாவில் பெரும்பாலான பெண் பாலியல் தொழிலாளர்கள் இந்தத் தொழிலுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகிறார்கள்.
இவர்களின் வாழ்க்கை, சுரண்டல், அன்றாட வன்முறை, ஒருபோதும் முடிவுக்கு வராத சமூகப் பாகுபாடு ஆகியவை நிறைந்ததாக உள்ளது.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



