ரஷ்யா: அணுசக்தி கொள்கையில் மாற்றங்களுக்கு புதின் ஒப்புதல்
ரஷ்ய அணுசக்தி கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். இது ரஷ்யா அணு ஆயுதத்தைப் எப்போது பயன்படுத்தலாம் என முடிவு செய்வதற்கு புதிய நிபந்தனைகளை வழங்குகின்றது.
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி யுக்ரேன் ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் அணுசக்தி கொள்கை தொடர்பான இந்த முக்கிய செயல்பாட்டை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.
அணுசக்தி கொள்கையில் எந்த மாதிரியான மாற்றங்களை ரஷ்யா குறிப்பிட்டுள்ளது? அது ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன? மற்ற நாடுகளின் எதிர்வினை எப்படி இருக்கும்?
-முழு விபரம் இந்த காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



