மழை வெள்ளத்தில் ஸ்தம்பித்த மும்பையின் நிலைமையை காட்டும் 10 புகைப்படங்கள்

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மே 25, 26 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, மும்பையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

இன்று (மே 27) இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும், கனமழை தொடரும். மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஷியஸாகவும் அதிகபட்சமாக 31 டிகிரி செல்ஷியஸாகவும் இருக்கும். இன்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடர்கிறது.

மே 28 முதல் மே 30 வரை மிதமான மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மும்பை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள் இனி.

ஷார்ட் வீடியோ

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு