காணொளி: 'உயர்சாதி எது?' 8-ம் வகுப்பு தேர்வில் சர்ச்சையான கேள்வி

காணொளிக் குறிப்பு, "உயர்சாதி எது?" - 8-ம் வகுப்பு தேர்வில் சர்ச்சையான கேள்வி
காணொளி: 'உயர்சாதி எது?' 8-ம் வகுப்பு தேர்வில் சர்ச்சையான கேள்வி

மகாராஷ்டிராவில் 8-ம் வகுப்புக்கான பயிற்சி தேர்வில் உயர்சாதி எது என்ற கேள்வி இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யவத்மால் மாவட்ட நிர்வாகம் உதவித்தொகைக்காக ஒரு தேர்வு நடத்துகிறது. அந்த தேர்வுக்கான பயிற்சி தேர்வில்தான் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வித்தாளை உருவாக்கும் பணி ஒரு நிறுவனத்திடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கேள்விக்கு ஆசிரியர்கள் மற்றும் பலரிடம் இருந்து கண்டனம் எழுந்த நிலையில், சர்ச்சையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு