ஐந்து ஆண்டுகளில் 59 தங்கம் - அசத்தும் 103 வயது தடகள வீரரின் சாதனை ரகசியம் என்ன?

காணொளிக் குறிப்பு, தாய்லாந்தைச் சேர்ந்த 103 வயதான ஸ்வான்ங் ஜான்பிரம், தடகளப் போட்டியில் ஐந்து ஆண்டுகளில் 59 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்
ஐந்து ஆண்டுகளில் 59 தங்கம் - அசத்தும் 103 வயது தடகள வீரரின் சாதனை ரகசியம் என்ன?

தாய்லாந்தைச் சேர்ந்த 103 வயதான ஸ்வான்ங் ஜான்பிரம், தடகளப் போட்டியில் பல சர்வதேச சாதனைகளை முறியடித்து வருகிறார். தனது 97 வயது வயதில் தடகளப் பயிற்சியைத் தொடங்கிய இவர், முதல் தொடரிலேயே மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஸ்வான்ங் முதல் முதலில் தனது நண்பருக்கு உடல்நிலை மோசமான பின்தான், உடற்பயிற்சியை தொடங்கியதாக அவரத மகள் சிரிபன் ஜான்பிரம் கூறினார். மேலும், தனது நண்பருக்கு ஏற்பட்ட நிலை தனக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதாக சிரிபன் கூறினார்.

குண்டு எறிதலில் ஆசிய சாதனையை முறியடித்துள்ள இவர், இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்றும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதாக கூறினார். இவர், ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் 59 முறை தங்கம் வென்றுள்ளார்.

இவர் தினமும், உடற்பயிற்சி செய்வதும், அவித்த முட்டை சாப்பிடுவதும், இரவில் சீக்கிரமாக உறங்குவதுமே தனது வெற்றியின் ரகசியம் எனக் கூறியுள்ளார்.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)