பிபிசி வளர்ந்து வரும் வீராங்கனை விருதை பெற்ற ஷீத்தல் தேவி யார்?
பிபிசி வளர்ந்து வரும் வீராங்கனை விருதினை ஷீத்தல் தேவி பெற்றுள்ளார். இமயமலை அடிவாரத்தில் இருந்து 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வது வரை, 18 வயது ஷீத்தல் தேவியின் மூன்று ஆண்டு பயணம் கடினமானது.
இந்தியாவில் இளம் வயதில் பாராலிம்பிக் பதக்கம் வென்ற ஷீத்தல், பிறவியிலேயே போகோமீலியா குறைபாடு கொண்டவர்.
இது கைகால்கள் சுருங்குதல் அல்லது வளர்ச்சியடையாமல் போகும் அரிய குறைபாடு.
2021-ல் ஷீத்தல் பெங்களூரு வந்தபோது, மற்ற பாரா தடகள வீரர்கள் இவருக்கு விளையாடத் தேவையான உடற்தகுதி இருப்பதாக கூறி உள்ளனர்.
மரம் மற்றும் மலைகளில் ஏறுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், இவருக்கு சிறந்த வலிமை இருந்தது.
வில்வித்தை பொருத்தமான விளையாட்டாக அடையாளம் காணப்பட்டது.
விரைவில், மாதா வைஷ்ணவ தேவி கோவிலின் விளையாட்டு அகாடமியில் அறிமுகமானார்.
அதன் பிறகு, ஷீத்தல் பின்வாங்கவில்லை.
மூன்று ஆண்டுகளில், ஷீத்தல் 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும், 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், 2023 உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
ஆனால் இந்தப் பயணம் தியாகங்களால் நிறைந்தது. ஷீத்தல் மூன்று வருடங்களாக வீட்டுக்கு செல்லவில்லை.
ஷீத்தலின் வாழ்க்கை மாறிவிட்டது.
அவரது வழியைப் பின்பற்றி, அவரது தங்கை ஷிவானியும் வில்வித்தை பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



