மோதி மீது ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு கோபமா? பின்னணி என்ன? - காணொளி
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆளும் பா.ஜ.க-வை 'திமிர் பிடித்தவர்கள்' என்றும், எதிர்தரப்பு இந்தியா கூட்டணியை 'பகவான் ராமருக்கு எதிரானவர்கள்' என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
“ராமர் அனைவருக்கும் நீதி வழங்குகிறார். 2024 மக்களவைத் தேர்தலைப் பாருங்கள். ராமரை வழிபடுபவர்களுக்கு படிப்படியாக ஆணவம் ஏற்பட்டது. அந்தக்கட்சி மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அந்தக்கட்சியின் ஆணவத்தால் அதற்குக் கிடைக்க வேண்டிய முழு பெரும்பான்மையை பெற கடவுள் அனுமதிக்கவில்லை,” என்று இந்திரேஷ் குமார் கூறினார்.
ராமரை எதிர்த்தவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவில்லை. அவர்களில் யாரும் ஆட்சிக்கு வர அனுமதிக்கப்படவில்லை. ஒன்றிணைந்த பிறகும் அவர்களால் முதலிடத்தை எட்ட முடியவில்லை. அவர்கள் இரண்டாவது இடத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. எனவே கடவுளின் முடிவு மெய்யானது.” என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



