காணொளி: எகிப்தில் துட்டன்காமன் குறித்த அருங்காட்சியகம் திறப்பு

காணொளிக் குறிப்பு, எகிப்து: துட்டன்காமன் குறித்த அரிய பொக்கிஷங்களுடன் கூடிய அருங்காட்சியகம் திறப்பு
காணொளி: எகிப்தில் துட்டன்காமன் குறித்த அருங்காட்சியகம் திறப்பு

மன்னர் துட்டன்காமன் குறித்த அரிய பொக்கிஷங்கள் கொண்ட கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் 22 ஆண்டுகால பணிகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது. தொல்பொருட்கள்

பாதுகாக்கப்பட்டு இங்கு எடுத்து வரப்பட்டன.

5,398 பழங்கால பொருட்கள் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டன. 1922ல் துட்டன்காமன் கல்லறை பெரிதும் அழியாது இருந்தது. உலகம் முழுவதையும் அது ஈர்த்தது.

அவரின் செழிப்பான உடைமைகள் 1960களில் உலக நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

அமெரிக்கா, கனடா, ஜப்பானில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

பாரிஸில் நூற்றாண்டின் மிகப்பெரும் கண்காட்சியாக இது அமைந்தது.

இதுவரை இவற்றை 17 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

கடைசியாக உலகின் 10 நகரங்களில் 14 லட்சம் பேர் பார்த்தனர்.

துட்டன்காமனின் பழம்பொடருட்கள் உலகம் முழுதும் பயணித்தாலும் அவரின் உடல் எகிப்தில்

அரசர்கள் புதைக்கப்படும் இடத்திலேயே உள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு