காணொளி: ஜெர்மனியில் பூச்சிகளால் ஆன உணவை வழங்கும் கஃபே

காணொளிக் குறிப்பு, ஜெர்மனியில் பூச்சிகளால் ஆன உணவை வழங்கும் கஃபே
காணொளி: ஜெர்மனியில் பூச்சிகளால் ஆன உணவை வழங்கும் கஃபே

சாப்பாட்டை சுற்றி ஈ பறந்தாலே நாம் அதை விரட்டி விடுவோம், ஆனால் ஜெர்மனியில் இருக்கும் இந்த கஃபேயில் வெட்டுக்கிளி, பூச்சி போன்றவை உணவாக விற்கப்படுகின்றன.

இந்த கஃபேயின் உரிமையாளரான மார்ட்டின், தனது குழந்தைகளிடமிருந்துதான் இதற்கான யோசனை வந்ததாக கூறுகிறார்.

ஆசியாவுக்கு அவரது குழந்தைகள் பயணம் மேற்கொண்டபோது, அங்கு அவர்கள் இதுபோல பொதுவாக சாப்பிடாத உணவுகளை சாப்பிட்டனர். இவ்வாறு தனது ஊரிலும் அறிமுகப்படுத்த விழைந்ததாக மார்ட்டின் தெரிவிக்கிறார்.

கோவிட் ஊரடங்கு காலத்தில் இருந்து அவரது கஃபேயில் இதுபோன்ற உணவுகளை மார்ட்டின் விற்று வருகிறார். இது சுவையாக இருப்பதாகவும் நெத்திலி மீன் போல இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு