டிரம்பின் வரி விதிப்பு சாமானிய மக்களை எப்படி பாதிக்கும்?
டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு நாடுகள் மீது வெவ்வேறு இறக்குமதி வரிகளை விதித்து வருகிறார். இது அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பை பாதுகாக்கவும் உதவும் என்று அவர் கூறிவருகிறார்.
எனினும், அவரது சர்வதேச வர்த்தக கொள்கை உலக பொருளாதாரத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன.
அதாவது இறக்குமதி செய்யப்படும் ஒரு பொருளின் மதிப்பு பத்து டாலர் என்று வைத்துக் கொள்வோம். அந்த பொருளுக்கு 10% இறக்குமதி வரி தீர்மானிக்கப்படுகிறது என்றால், அந்த பொருளின் மதிப்பில் 10% வரியாக வசூலிக்கப்படும். அதாவது, அந்த பொருளுக்கு ஒரு டாலர் வரி என்று அர்த்தம். எனவே, குறிப்பிட்ட பொருளின் விலை 11 டாலராக இருக்கும்.
இந்தியா உட்பட பல நாடுகளுக்கு டிரம்ப் இந்த வரிகளை அதிகரித்துள்ளார். அப்போது, சரக்குகளை இறக்குமதி செய்யும் விலை, அமெரிக்கா இறக்குமதியாளர்களுக்கு மேலும் அதிகரிக்கும்.
முழு விவரம் காணொளியில்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



