கேரள செவிலியர் நிமிஷா பிரியா வழக்கு பற்றி அவரது கணவர் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு,
கேரள செவிலியர் நிமிஷா பிரியா வழக்கு பற்றி அவரது கணவர் கூறுவது என்ன?

ஏமனில் ஹூத்தி கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜூலை 16ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனத் தெரிய வந்ததாக நிமிஷாவின் குடும்பத்தினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தற்போது அவரது மரண தண்டனை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றப்படக் குறைந்த அவகாசமே இருந்த நிலையில், தண்டனை ஒத்தி வைக்கப்படுவதற்கு முன்பு அவரது கணவர் மற்றும் ஊர் மக்களிடம் பிபிசி பேசியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு