மேற்குவங்கம்: விரட்ட வந்த ஜேசிபி வாகனத்தை முட்டித்தூக்கிய யானை
மேற்குவங்கம்: விரட்ட வந்த ஜேசிபி வாகனத்தை முட்டித்தூக்கிய யானை
ஊருக்குள் புகுந்த காட்டுயானையை ஜேசிபி வைத்து மக்கள் விரட்ட முயன்ற காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது.
மேற்குவங்க மாநிலம் ஜல்பய்குரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
விரட்ட வந்த ஜேசிபி மீது மோதியதில் யானை காயமடைந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வனத்துறை அதிகாரிகள் ஜேசிபியை கைப்பற்றி அதன் ஓட்டுனரை கைது செய்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



