இலங்கை: தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் எதிர்காலம் என்ன?

காணொளிக் குறிப்பு, இலங்கை
இலங்கை: தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் எதிர்காலம் என்ன?

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் மூன்று இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களை இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுயேச்சைக் குழு ஒன்று ஆகியவை பகிர்ந்துகொண்டிருக்கின்றன.

தமிழரசுக் கட்சி வலுவாக உள்ளதாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தில், தேசிய மக்கள் சக்தி மூன்று இடங்களைப் பெற்றதும் சுயேச்சையாக ஒருவர் தேர்வானதும் தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? அரசியல் விமர்சகர்கள் இதை எப்படி பார்க்கின்றனர்?

முழு தகவல் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)