சௌதி அரேபியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: இந்த இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே கசப்பு அதிகரிப்பது ஏன்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவு பெற்ற 'சதர்ன் டிரான்சிஷனல் கவுன்சில்' (Southern Transitional Council) குழு கடந்த வாரம் ஏமனின் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் எண்ணெய் இருப்புகளை மீண்டும் கைப்பற்றியதாக அறிவித்தது.
சௌதி ஆதரவு கொண்ட படைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, இந்தப் பகுதிகள் ஏமனின் கிளர்ச்சி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
2022 போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்த பகுதியில் அமைதி நிலவிவரும் நேரத்தில் சதர்ன் டிரான்சிஷனல் கவுன்சில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த மோதல் ஏமன் விவகாரத்தில் இரு முக்கிய மத்திய கிழக்கு நாடுகளான சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே மீண்டும் கசப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் சௌதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய ஊடகங்களில் பேசு பொருளாகி உள்ளது.
ஏமன் விவகாரம் மட்டுமல்ல, சூடான் விவகாரம், ஒபெக் பிளஸ் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடு, பிராந்திய அதிகாரத்துக்கான ஆசை என பல விவகாரங்கள் சௌதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான உறவில் கசப்பை ஏற்படுத்தி உள்ளன. அவை குறித்து இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



