ஆன்லைன் மோசடி மையத்திலிருந்து மீட்கப்பட்ட 7,000 பேர் - எங்கே?

காணொளிக் குறிப்பு,
ஆன்லைன் மோசடி மையத்திலிருந்து மீட்கப்பட்ட 7,000 பேர் - எங்கே?

மியான்மரில் உள்ள ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் 7,000க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

அதிக அளவிலான மக்களை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதால், இதற்கு கூடுதல் நேரமாகலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இதில் சிலர் சொந்த நாடுகளே தங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதாகவும் கூறுகின்றனர்.

இதில் பலர் போலியான வாக்குறுதி மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களைப் போலி காதல் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் மூலம் ஏமாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)