காணொளி: லண்டன் நீதிமன்ற சுவரில் ஓவியம் மறைக்கப்பட்டது ஏன்?
காணொளி: லண்டன் நீதிமன்ற சுவரில் ஓவியம் மறைக்கப்பட்டது ஏன்?
லண்டன் ராயல் கோர்ட்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் சுவரில் பிரபல ஓவியர் பேங்க்ஸி வரைந்த ஓவியம் செப்டம்பர் 8ஆம் தேதி காணப்பட்டது. அந்த ஓவியம் உடனே மறைக்கப்பட்டது.
இந்த ஓவியம், பாலத்தீனத்துக்கு ஆதரவாக போராடிய பாலத்தீன் ஆக்ஷன் குழுவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளது என கருதப்படுகிறது.
இந்த குழுவின் செயற்பாட்டாளர்கள் ஆர்ஏஎஃப் (RAF) விமானங்களை சேதப்படுத்திய பிறகு, பிரிட்டன் அந்த குழுவை ஜூலை மாதம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்தது.
முழு விவரம் காணொளியில்..
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



