குஜராத்தில் பொது மக்களை தாக்கிய சிறுத்தை - காணொளி
குஜராத்தில் பொது மக்களை தாக்கிய சிறுத்தை - காணொளி
புதர்களில் இருந்து திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை இந்த மனிதரைத் தாக்கியது. இந்தச் சம்பவம் குஜராத்தில் உள்ள கேடா மாவட்டத்தின் தாஸ்ரா தாலுகாவில் நிகழ்ந்துள்ளது.
உதம் புரா கிராமத்தில் சிறுத்தையைக் கண்டதும், மக்கள் அலறி ஓடினர். அப்போது சிறுத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்த மூன்று பேர், 108 சேவை மூலம் சிகிச்சைக்காக தஸ்ரா சிஹச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
“வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சிறுத்தையைப் பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய தகவலின்படி, சிறுத்தை இன்னும் பிடிக்கப்படவில்லை.” என உள்ளூர்வாசி கனுபாய் பர்மர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



