மேல்மா விவசாயிகள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போகிறார்களா?

காணொளிக் குறிப்பு, திருவண்ணாமலை விவசாயிகள் பத்து மாதங்களாக சிப்காட்டிற்கு எதிராக போராடி வருகின்றனர்.
மேல்மா விவசாயிகள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போகிறார்களா?

திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறுக்கு அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்காக தங்கள் நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது என விவசாயிகள் போராடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ஏற்கெனவே இரண்டு சிப்காட் தொழில் வளாகங்கள் செயல்பட்டுவரும் நிலையில், மூன்றாவதாக தொழிற்பேட்டை ஒன்றை அமைப்பதற்காக செய்யாறு வட்டத்திலுள்ள மேல்மா, நர்மாபள்ளம், குரும்பூர், காட்டுக்குடிசை, தேத்துறை, இளநீர்குன்றம், வட ஆளப்பிறந்தான், அத்தி, சௌந்தரபாண்டியபுரம், மணிப்புரம், நெடுங்கல், வீரம்பாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது.

இதனால் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகில் உள்ள மேல்மா, குரும்பூர் உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு மேலாக வாழ்க்கை நிம்மதியில்லாமல் இருக்கிறது.

இந்நிலையில் இந்த விவசாயிகள் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த காணொளியில் காணலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)