சாங் சுங்-லிங்: அதானிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? (காணொளி)

காணொளிக் குறிப்பு, யார் இந்த சாங் சுங்-லிங்? அதானிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?
சாங் சுங்-லிங்: அதானிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? (காணொளி)

ஹிண்டன்பர்க் அறிக்கையில் மொத்தம் மூன்று முறை, சாங் சுங்-லிங் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

சாங் சுங்-லிங்கை முதன்முறையாகக் குறிப்பிட்டு, மொரீஷியஸில் க்ரோமோர் என்ற ரகசிய நிறுவனம் இருப்பதாக அறிக்கை கூறுகிறது, இந்த நிறுவனத்தை அதானி பவர், 42.3 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. இந்த நிறுவனத்தை சாங் சுங்-லிங் நடத்தி வருகிறார். சிங்கப்பூரில் உள்ள கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் உள்ளூர் முகவரியை சுங்-லிங் தனது முகவரியாக கொடுத்துள்ளார்.

சுங்-லிங்குக்கும் அதானி குழுமத்துக்கும் நீண்டகால தொடர்பு இருப்பதாகவும், அவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு நெருக்கமானவர் என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை கூறுகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் இந்த சீன நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது இடம் பிஎம்சி திட்டத்துடன் தொடர்புடையது. அதானி எண்டர்பிரைஸ் நிறுவனம், பிஎம்சி ப்ராஜெக்ட் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு கடந்த 12 ஆண்டுகளில் 6300 கோடி ரூபாய் வழங்கியதாக அறிக்கை கூறுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சாங் சுங்-லிங்கின் மகன். 2014 ஆம் ஆண்டில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இந்த நிறுவனத்தை 'டம்மி நிறுவனம்' என்று அழைத்தது.

ஹிண்டன்பர்க்கிற்கு அதானி குழுமத்திடம் இருந்து 413 பக்க பதில் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த நீண்ட பதிலில் சீன குடிமகன் சாங் சுங்-லிங்குடனான குழுமத்தின் உறவு குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

அதானிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் சீனாவின் சாங் சுங்-லிங் யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதானி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: