காணொளி: சமந்தாவின் கணவர் ராஜ் நிதிமோரு யார்? பின்னணி விவரம்

காணொளிக் குறிப்பு, சமந்தா திருமணம் செய்துகொண்ட ராஜ் நிதிமோரு யார்?
காணொளி: சமந்தாவின் கணவர் ராஜ் நிதிமோரு யார்? பின்னணி விவரம்

நடிகை சமந்தா டிசம்பர் 1 ஆம் தேதி ராஜ் நிதிமோரு என்பவரை கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பூதசுத்தி முறையில் திருமணம் செய்து கொண்டார்.

ஈஷா மையத்தின்படி பூதசுத்தி முறையானது, ஒருவரின் உடலின் பஞ்சபூதங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு நல்வாழ்வை நிலைநாட்ட உதவும் ஒரு பயிற்சியாகும்.

ஆனால் யார் இந்த ராஜ் நிதிமோரு என்பது தான் இப்போது மிகவும் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது.

இவர் ஒரு பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இவரது படைப்புகள் பெரும்பாலும் இந்தி மொழியில் உள்ளது.

இவர், பொதுவாக தனது நீண்டகால நண்பரான கிருஷ்ணா டி.கே. உடன் இணைந்து ராஜ்&டிகே (Raj & DK) என்ற பெயரில் திரைத்துறையில் பணியாற்றுவது வழக்கம்.

தி ஃபேமிலி மேன், ஃபார்ஸி, கன்ஸ்&குலாப்ஸ் போன்ற இணைய தொடர்களையும் அவர் இணைந்து இயக்கியுள்ளார்.

மேலும், எ ஜென்டில்மேன், ஸ்த்ரீ போன்ற படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

தி ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனிலும் சிட்டாடெல் ஹனி பன்னி தொடரிலும் சமந்தா நடித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு