காணொளி: பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளியால் 114 பேர் உயிரிழப்பு
காணொளி: பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளியால் 114 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள கல்மேகி சூறாவளியால் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
நடப்பாண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக இது கருதப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் இதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார்.
செபு மாகாணம் தான் இந்த சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 71 பேர் உயிரிழந்துள்ளனர். 82 பேர் காயமடைந்துள்ளனர், 127 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் 28 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக செபு மாகாண அதிகாரிகள் கூறுகின்றனர். இவை தேசிய சிவில் பாதுகாப்பு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



