புலியை வேடிக்கை பார்க்க குழுமிய மக்கள் - கிராமத்திற்குள் புலி வந்தது எப்படி?
புலியை வேடிக்கை பார்க்க குழுமிய மக்கள் - கிராமத்திற்குள் புலி வந்தது எப்படி?
அட்கொனா கிராமத்துக்கு ஒரு புதிய விருந்தாளி வந்திருக்கிறார்.
கிராமவாசிகள் ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
இங்கே ஒரு குருத்வாரா சுவரில் புலி ஒன்று அமைதியாக படுத்திருக்கிறது.
உத்தரபிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் இருந்து இங்கே வந்திருக்கிறது.
வனத்துறையினர் புலியை சுற்றி பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளனர்.
புலி நேற்று இரவு இந்த பகுதிக்கு வந்ததாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



