2020 டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன?
பிப்ரவரி 2020. வடகிழக்கு டெல்லியில் மதக் கலவரம் வெடித்தபோது 53 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள். அவர்களில் ஒருவர் சலீமின் சகோதரர். சலீம் தனது பக்கத்து வீட்டில் மறைந்திருந்தவாறு ஜன்னல் வழியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்
"ஒருத்தன் என் சகோதரனோட நெஞ்சில் சுட்டான். அவனை அடிச்சு உதைக்க ஆரம்பிச்சாங்க. மறுபடியும் நெஞ்சில சுட்டாங்க. ஊஞ்சல் மாதிரி ஆட்டி நெருப்புல வீசுனாங்க. அவன் எழுந்திரிக்க முயற்சி பண்ணான். கைகளை தூக்கினான். அவன இந்த இடத்துல சுட்டாங்க. அதுகப்புறம் என் சகோதரன் விழுந்துட்டான். இந்த முறை அவனால நெருப்பவிட்டு எழுந்திருக்க முடியல. நான் அதை பாத்தேன். ஆனா என்னால எதுவும் பண்ண முடியல" என்கிறார் சலீம்.
இதே வட்டாரத்தில் 30 ஆண்டுகளாக சலீமின் பக்கத்து வீட்டுக்காரரான மற்றொரு இந்து ஒருவரும் இருக்கிறார்.
"அவர் ஒரு அவதாரம் மாதிரி.. ராம், ரஹீம், அல்லாஹ் எதுனாலும் நீங்க நினைச்சுக்கோங்க. எங்களுக்காக ஒரு அரணா நின்னாரு. என் குழந்தைகள காப்பாத்துனாரு. நா உயிரோட இருக்கிற வரைக்கும் அவர் செஞ்ச உதவிய மறக்க மாட்டேன்" என்கிறார் சலீம்.
வீடுகளும், கடைகளும் தாக்கப்படும்போது, மதத்தின் பெயரால் உயிர்கள் பறிக்கப்படும்போது, அச்சத்துக்கு முன்பு நம்பிக்கை கொள்வதற்கு எப்படி தைரியம் வரும்?
முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



